• Dec 27 2024

விவாகரத்து டைம்ல தான் அது நடந்துச்சு.. ஆனாலும் நான் சம்பந்தப்படுத்தல! சமந்தா சொன்ன சீக்ரெட்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகைகள் ஒருவராக நடிகை சமந்தாவும் திகழ்ந்து வருகின்றார். இவர் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட போதும் தற்போது அதில் இருந்து மீண்டு நடிப்பு, பிசினஸ் என தனது கவனத்தை செலுத்தி வருகின்றார்.

இந்த நிலையில், விவாகரத்து நேரத்தில் ஊ சொல்றியா பாடலுக்கு நடனமாட வேண்டாம் என பலர் அறிவுறுத்தியதாக சமந்தா கூறியுள்ளார்.


அதாவது, நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா, அதன்பின் அவரை விவாகரத்து செய்தார். அவர் விவகாரத்தை அறிவித்த சமயத்தில் தான் புஷ்பா படத்தின் பாடலுக்கு நடனமாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன் போது, அதில் நடிக்க வேண்டாம் என குடும்பத்தார், நண்பர்கள் கூறியதாக சமந்தா தெரிவித்தார். இருந்தாலும், திருமண வாழ்க்கையில் 100 சதவீதத்தை கொடுத்தும் பயனளிக்காத நிலையில், விவாகரத்தையும் ஊ சொல்றியா பாடலில் நடிப்பதையும் ஏன் சம்பந்தப்படுத்த வேண்டும் என தனக்கு தானே கேள்வி கேட்டுக்கொண்டதாக சமந்தா குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த தகவல் வைரலாகி உள்ளது.

Advertisement

Advertisement