• Dec 26 2024

அந்த டைம்ல என்னோட கையை யாராவது பிடிக்க முடியுமா?- ஓபனாவே கேட்ட நடிகை மாளவிகா மோகனன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்  மற்றும் நீலம் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்த திரைப்படம் தான்‘தங்கலான்’.இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.இப்படத்தில் அவருடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் எனப் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.

 இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். தற்போது தங்கலான் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படமானது ஜனவரி மாதம் 26 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


இந்நிலையில் மாளவிகா மோகனன் தனது சோசியல் மீடியா பக்கத்தில், "எனக்கு படத் தயாரிப்பின் பயங்கரமான பகுதி டப்பிங் தான். நான் டப்பிங் செய்யும் பொழுது யாராவது வந்து எனது கையை பிடித்துக் கொள்ள முடியுமா?" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் தங்கலான் என்பதன் பொருள் ஊர்க்காவல் என்பது பொருளாகும். இரவு நேரங்களில் ஊரை சுற்றிவருவதும், அந்த ஊரை சாராதவர்கள் எவரும் ஊருக்குள் வந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்துவது, தேவைப்பட்டால் கிராமத்து தலைவருக்கு தகவல் தெரிவிப்பதும் இவர்களது பொறுப்பாகும் என்றும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement