• Dec 25 2024

புதிய சிக்கலில் சிக்கிய கங்குவா! ரிலீஸ் திகதியில் மாற்றம் ஏற்படுமா!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சூர்யாவின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் கங்குவா. இது 14ம் திகதி ரிலீசாகிறது. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இதற்கு முன்னர் அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி உள்ள சிவா, நடிகர் சூர்யா உடன் முதன்முறையாக பணியாற்றியுள்ள படம் கங்குவா. 


சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.  இப்படத்தில் சூர்யா,பாலிவுட் நடிகை திஷா பதானி,  பாபி தியோல் நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

d_i_a


ரிலீசுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கங்குவா திரைப்படம் தற்போது புது சிக்கலில் சிக்கி இருக்கிறது. 75 - 25 என்கிற ஷேர் டீலிங்கிற்கு பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் சம்மதம் தெரிவிக்காமல் இருக்கிறார்கள். இதனால் வசூலில் திரைப்படம் அடிபடுமென எதிர்பார்க்கபடுகிறது.


 

Advertisement

Advertisement