• Dec 26 2024

கேப்டன் விஜயகாந்த் அவதாரம் எடுத்த நகைச்சுவை பிரபலம்! ஏழை மக்களால் குவியும் பாராட்டு

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில்  தான் வர வேண்டும் என்ற கனவோடு 4 வருடங்களாக விஜய் டிவிக்கு பின்னாலேயே சுத்தி திரிந்து  தனது திறமையினால் விஜய் டிவியில் காலடி வைத்து, தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்கள் மனதில் செல்லப்பிள்ளையாக இடம் பிடித்தவர் தான் KPY பாலா.

இவர் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமை மூலம் பேசப்பட்டவர். வெட்டுக்கிளி என அழைக்கப்படும் இவரின் காமெடியை அடிச்சுக்க சின்னத்திரையில் ஆளே இல்லை எனக் கூறலாம்.

காமெடியால்  ஒருவரை சிரிக்க வைப்பது  மட்டுமல்ல  தன்னால் முடிந்தவரை பலருக்கு பல  உதவிகள் செய்து, அவர்களை சிரிக்க வைக்கும் நல்ல மனம் கொண்டவர் பாலா. 


ஒரு காலத்தில் ஒரு நேர உணவுக்கு கூட கஷ்டப்பட்ட இவர்  தற்போது தனக்கு வரும் வருமானத்தில் மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார் . அதே போல் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றையும் வாங்கி கொடுத்தார். அது பரவலாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது . 


மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து சுமாா் 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 கொடுத்து உதவினார்.  சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டம் கோட்டை கயப்பாக்கம் என்ற கிராமத்தில் ரூ.3 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இவர் தற்போது சென்னை அனகாபுத்தூர் பகுதியில் மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ சேவையை இன்று தொடங்கி வைத்துள்ளார். இவ்வாறு kpy பாலா செய்யும் உதவிகளுக்கு கணக்கே இல்லை என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement