• Apr 18 2026

த்ரிஷாவுடன் ஒரே காரில் வந்த விஜய்.. கடுமையான பதிவினை வெளியிட்ட பிரபலங்கள்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு திருமண நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக அந்த நிகழ்ச்சிக்கு அவர் நடிகை த்ரிஷாவுடன் சேர்ந்து வந்தது குறித்து வெளியான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய குடும்பத்தின் திருமண விழாவில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இருவரும் ஒரே காரில் வந்து இறங்கினர். அவர்கள் மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.

இந்த விவகாரம் அதிகமாக பேசப்படுவதற்கான மற்றொரு காரணம் நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி முன்பு வெளியான செய்திகள் தான். குறிப்பாக அவரது மனைவி சங்கீதா மற்றும் விஜய் குறித்த விவாகரத்து செய்தி கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. 


இந்த நிலையில், விஜய் மற்றும் த்ரிஷா ஒரே காரில் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இந்த விவகாரத்தை மீண்டும் பேசுபொருளாக மாற்றியுள்ளது. சமூக வலைத்தளங்களில் சிலர் இதை சாதாரண நிகழ்வாகவே எடுத்துக்கொண்டாலும், மற்றவர்கள் பல்வேறு ஊகங்களை முன்வைத்து கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் சில பிரபலங்களும் இந்த விஷயம் குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தேவையற்ற முறையில் விவாதிப்பது தவறு என்று கூறியுள்ளனர். மற்றொரு பக்கம், பொது வாழ்வில் இருக்கும் பிரபலங்கள் செய்யும் செயல்கள் ரசிகர்களிடையே இயல்பாகவே கவனத்தை ஈர்க்கும் என்றும் கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement