• Dec 25 2024

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்... கலந்து கொள்ள படையெடுக்கும் பிரபலங்கள்... புளூ சட்டை மாறன் டுவிட்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ஆம் தேதி (நாளை) கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலர் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். 


இதற்காக பல பிரபலங்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அது குறித்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். "அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் அமிதாப் பச்சன், கங்கனா ரனவத், அக்சய் குமார், அஜய் தேவ்கன், அனுபம் கெர், சன்னி தியோல், மோகன்லால், ரிஷப் ஷெட்டி, யஷ், ராம்சரண், பிரபாஸ், அல்லு அர்ஜுன், ரஜினிகாந்த், தனுஷ். காமடி நடிகர் சதீஷ், பாடகர் உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளதாக ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார். 


மேலும், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அழைக்கப்பட்டு இருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார். இவர்கள் மட்டுமின்றி இன்னும் பெரிய லிஸ்ட்டே நாளை அயோத்திக்கு படையெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Advertisement

Advertisement