• Dec 25 2024

சாச்சனா நீ குட்டி பிசாசு டி.. குட்டிப்பிசாசு..!! முழு பைத்தியமான பெண் போட்டியாளர்?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் தற்போது டெவில்ஸ்  மற்றும் ஏஞ்சல்ஸ் ஸ்டாக் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே தர்ஷிகாவுக்கும் ஜாக்குலினுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்ற ப்ரோமோ வெளியாகி இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசன்களிலும் ஒரு சில ஸ்டாக்குகள் தவறாமல் இடம்பெற்று வருகின்றன. அதன் படி தற்போது டெவில்ஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் டாஸ்க்கும் இந்த சீசனில் நடைபெற்றுள்ளது. இதில் பல சம்பவங்களும் பல சண்டைகளும் கிளம்புவது வழக்கம்.

ஏஞ்சல்ஸ் அணியில் இருக்கும் போட்டியாளர்களை வெறுப்பேற்றி அவர்கள் கோபத்திற்கு ஆளானாலோ இல்லை அழுதாலோ அவர்களிடம் இருக்கும் ஹார்ட் சிம்பலை கழட்டி கொடுத்து விட வேண்டும் என்பதுதான் ரூல்ஸ். பிறகு அவர்கள் டெவில் டீமில் சேர்ந்து விடுவார்கள்.அதே போல அதிகமான ஹார்ட் பெறுபவர்கள் இந்த வாரம் நாமினேசன் ப்ரீ டாஸ்கை பெற போகின்றார்கள் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

d_i_a

இவ்வாறு நாமினேஷனில் தப்பிப்பதற்காக ஒவ்வொரு வாரமும் சிலர் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படியான சூழ்நிலையில் அவர்களை கோபப்படுத்தி ஹர்ட்டை பெற்று விட வேண்டும் என்று டெவிலாக இருக்கும் போட்டியாளர்கள் ஆர்வம்  காட்டி வருகின்றார்கள்.


இந்த நிலையில், தற்போது வெளியான நான்காவது ப்ரோமோவில் அன்சிதா, கீழே கிடக்குற சாப்பாட்டை எல்லாம் சாப்பிடுடி என்று சாச்சனாவை சொல்லுகின்றார். 

மேலும் தீபக்கிடம் எனக்கு கோபம் வருது.. எனக்கு கோபம் வருகிறது.என்று கத்திக்  கொண்டு உள்ளார். அதில் சாச்சனா ஹார்ட்டை காட்ட அங்கிருந்த அன்சிதா நீ குட்டி பிசாசு டி.. நீ குட்டி பிசாசு என்று சாச்சனாவை  பார்த்து கத்துகின்றார்.

Advertisement

Advertisement