• Dec 25 2024

திருமணம் முடிந்த கையோடு கோவிலுக்கு செல்லும் சைதன்யா-சோபிதா தம்பதிகள்....

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவருக்கும் இன்று டிசம்பர் 4, 2024 ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் நடைபெற்றது. ஷோபிதா தனது திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. 


சுமார் 8 மணி நேரம் நடைபெற உள்ள இவர்களின் திருமணத்திற்கு நடிகர் நாகார்ஜுனா 200 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன.  நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யா ஏற்கனவே நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. நான்கு வருடங்களிலேயே  விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.


இதானால் ஒருபக்கம் சர்ச்சைகளுக்கு மத்தியில் இவர்களின் திருமணம் இனிதே நடைபெற்றுள்ளது. சமந்தா ரசிகர்கள் அதிர்ப்த்தி தெரிவித்தாலும் பலர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முக்கிய பல பிரபலங்களும் இதில் கலந்து கொண்டனர்.  இவர்களின் திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்கள் கோவிலுக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement