• Dec 25 2024

MGR ருக்கு தம்பியாக நடித்த சந்திரமோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! மீளாத்துயரில் தமிழ்த்திரையுலகம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து புகழ்பெற்ற நடிகரான சந்திரமோகன் உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர், எம்ஜிஆருக்கு தம்பியாக 'நாளை நமதே' படத்தில் நடித்திருந்தார். அத்துடன், 1966ஆம் ஆண்டு வெளியான 'ரங்குல ரத்னம்' படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு, ஜலந்தர் என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். 


இந்த நிலையில், இதயநோய் காரணமாக ஹைதரபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்திரமோகன், சிகிச்சை பலனின்றி தனது 82வது வயதில் உயிரிழந்துள்ளார்.


அதேவேளை, அவரது இறுதிச்சடங்கு எதிர்வரும் திங்கள்கிழமை (நவ.13) ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. அவரது மறைவுக்கு தெலுங்கு மற்றும் தமிழ்த்  திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement