• Dec 26 2024

ஸ்கூல் படிக்கும் போது விஜய்யின் CASTE இதான் ... 49 வருஷ ரகசியத்தை அம்பலமாக்கிய சந்திரசேகர்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜய், கோடி கணக்கில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ளார். தற்போது அரசியலிலும் நுழைந்த அவர், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சி ஒன்றை ஆரம்பித்து சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.

மறுபக்கம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இவருடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், லைலா, சினேகா, மைக் மோகன் என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றார்கள்.

தற்போது அரசியலில் கால் பதித்த நடிகர் விஜய், இப்போது நடிக்கும் படத்திலும் அதற்கு பிறகு ஒப்பந்தமாகி உள்ள படத்திலும் நடித்துவிட்டு சினிமா துறையில் இருந்து ஓய்வெடுக்க போவதாகவும் அறிவித்திருந்தார். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலை இலக்காக கொண்டு தமது செயற்பாடுகள் நகரும் எனவும் அரசியல் சார்பில் தெரிவித்திருந்தார்.


அண்மையில் கில்லி திரைப்படம் 20 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் ஆன போது இந்த ஆண்டு வெளியான படங்களை விடவும் கில்லி திரைப்படம் வசூலில் வேட்டையாடியிருந்தது. இந்த படத்தை பார்த்த பலரும் சினிமாவிலிருந்து வெளியேற வேண்டாம் என விஜய்க்கு நேரில் சென்று கோரிக்கை வைத்திருந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது நடிகர் விஜயின் அப்பா சந்திரசேகர், விஜய்க்கு மதமே கிடையாது. விஜய் ஸ்கூலில் சேர்க்கும் போது சர்டிபிகேட், நேஷனல் ஐடி, ரிலிஜியன், காஸ்ட்ல  இந்தியன் என்று தான் போட்டுக் கொடுத்தேன். கிட்டத்தட்ட 49 வருஷம் ஆச்சு ஆனால் இன்னும் விஜய் சர்டிபிகேட்ல அப்படியே தான் இருக்கு என கூறியுள்ளார். தற்போது இந்த தகவல் வெளியாகி வைரலாகி உள்ளது.

Advertisement

Advertisement