• Dec 25 2024

பிக் பாஸ் வீட்டில் ஆள் மாறாட்டம்.? சுனிதாவை போட்டுத் தாக்கிய சவுண்ட் சௌந்தர்யா

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஆரம்பிக்கப்பட்டு மூன்றாவது வாரத்தை கடந்துள்ளது. இந்த சீசன் ஆரம்பத்தில் விறுவிறுப்பு இல்லாமல் காணப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் இந்த சீசனில் விஜய் டிவி பிரபலங்கள் அதிக அளவில் களம் இறக்கப்பட்டது தான்.

18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சீசன் தற்போது மூன்று பேர் எலிமினேட்டாகி வெளியேறிய நிலையில் 15 பேருடன் காணப்படுகின்றது. அதில் ஆண்கள் அணியில் ஏழு பேரும் பெண்கள் அணியில் எட்டு பேரும் காணப்படுகின்றார்கள்.

தற்போது நான்காவது வாரம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதில்  கேப்டன்சி டாஸ்க்கில் முத்து வெற்றி பெறுகின்றார். இதை தொடர்ந்து இந்த வாரத்திற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

d_i_a

அதன்படி பிக் பாஸ் தலைவர் வழங்கப்பட்ட டாஸ்க்குஆள் மாறாட்டம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆள் மாறாட்டம் என்ற தலைப்புக்கு ஏற்றார் போலவே ஒருவர் மற்றொருவரை போல இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் நடித்துக் காட்ட போகின்றார்கள்.


ஒரு போட்டியாளர் மற்றைய போட்டியாளரை போல மொத்தமாகவே அவர்களது நடை, உடை, பாவனை, பேச்சு மட்டுமின்றி அவர்கள் மக்களுக்கு இதுவரை காட்டாத முகத்தை எடுத்துக்காட்ட நினைத்தால் அதையும் எடுத்துக்காட்டலாம் என்று பிக் பாஸ் கூறியுள்ளார்.

அதன்படி ஆட்டத்தை இப்போது ஆரம்பித்துள்ளார்கள் பிக் பாஸ் போட்டியாளர்கள். அதிலும் சௌந்தர்யா சுனிதா போல நடித்து ஓவர் ஆக்சன் பண்ணி உள்ளார். எனவே போட்டியாளர்கள் சக போட்டியாளர்களைப் போல நடித்துக் காட்ட உள்ள இந்த ஆள் மாறாட்டத்தின் டாஸ்க்கில் யார் யார் மோதிக்கொள்ள போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement