• Jul 22 2025

Boomer மாதிரி இருக்கு!‘ஆட்டோகிராஃப்’ மீண்டும் திரைக்கு வரும் சூழலில் சேரனின் கருத்துக்கள்

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறந்த உணர்வுகளுக்கு அடையாளமாக அமைந்த திரைப்படம் தான் ‘ஆட்டோகிராஃப்’. காதலின் மூன்று பருவங்களை எளிமையாகவும் நெஞ்சை நெகிழவைக்கும் விதமாகவும் செதுக்கிய இயக்குநர் சேரன், தற்போது அந்தப் படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.


அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இவர் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து சுவாரஸ்யமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரை விமர்சகர்களும் அவரது இந்த நேர்மையான பேச்சை பாராட்டி வருகின்றனர்.

2004ம் ஆண்டு வெளியான ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம், ஒரு சாதாரண மனிதனின் காதல் பயணத்தை நம்மிடம் சுவாரஸ்யமாகக் கூறியுள்ளது. அந்த நேரத்தில், இது தமிழ் சினிமாவில் ஒரு புதிய கலைநோக்கை கொண்டு வந்த படமாகவும், எமோஷன்கள், காதல் போன்றவற்றை வணிக ரீதியில் கலையாக இணைத்த ஒரு சிறந்த முயற்சியாகவும் அமைந்திருந்தது.


சமீபத்திய தமிழ் திரையுலகத்தில் ரீ-ரிலீஸ் என்பது புதிய டிரெண்டாக மாறிவிட்டது. விஜய், அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் பழைய ஹிட் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றுவருகின்றது. 

இதைப் பார்த்த சேரனும், ஆட்டோகிராஃபை மீண்டும் வெளியிடலாம் என்ற எண்ணத்தில், புதிய தலைமுறையைக் கவர சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். இயக்குநர் சேரன் கூறியதாவது, “அப்போ அந்த படம் 2 மணி 50 நிமிடங்கள். இப்போ நாங்க ரீ-ரிலீஸ்க்கு ரெடியாகும் போது, ஒரு 20 நிமிடக் காட்சிகள்  கட் பண்ணியிருக்கேன். ஏன்னா இப்போதைய audience பொறுமையா படம் பார்ப்பாங்கன்னு தெரியல." என்றார். 

மேலும், “பழைய டயலாக்ஸ், acting பார்க்கும்போது எனக்கே cringe ஆகுது..Boomers மாதிரி இருக்கு. எனக்கே ஓவர் ஆக்டிங் பண்ணியிருக்கமோ என்று தோணுது." எனவும் கூறியிருந்தார். இதனை அறிந்த ரசிகர்கள் இயக்குநர் சேரன், பழைய நினைவுகளை மீண்டும் திரைக்கு கொண்டு வர முயற்சி செய்கிறார் என்பதை நாம் நிச்சயம் பாராட்டவேண்டும் என்று கூறிவருகின்றனர். 


Advertisement

Advertisement