• May 22 2026

நீட் வரலாற்றை திருப்பிய முதலமைச்சர் விஜய்.! மத்திய அரசுக்கு நேரடி சவால்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மருத்துவ படிப்புகளில் நீட் தேர்வு அடிப்படையிலான சேர்க்கையை ரத்து செய்து 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த ஆண்டு 432 தேர்வு மையங்களில் 31 நகரங்களில் நடைபெற்ற நீட் தேர்வை சுமார் 1.44 லட்சம் தமிழக மாணவர்கள் எழுதியுள்ளனர்.

எனினும் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டு காரணமாக இந்திய அரசின் ஒப்புதலுடன் தேசிய தேர்வு முகமை நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்துள்ளது. இந்த விவகாரம் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.


இந்த ரத்து நடவடிக்கை லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். இது முதல் முறையல்ல என்றும் 2026ல் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஆறு மாநிலங்களில் எஃப்ஐஆர் பதிவாகியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீட் தேர்வால் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களும் சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்ப மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவதாக குறிப்பிட்ட முதலமைச்சர், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்து 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement