• Dec 26 2024

Zoo-வில் லியோபட ஹைனாவை கண்டு சுப்ரமணி என்றழைத்த குழந்தைகள்... நெகிழ்ச்சியான சம்பவம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியான லியோ திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் பார்த்து பல கோடி வசூலை தந்தது. விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து மக்களும் பார்த்து ரசித்த திரைப்படமாகயிருந்தது 


லியோ திரைப்படத்தில் நடிகை திரிஷா , அர்ஜுன், சேன்டி, ஜனனி,மன்சூர் அலிகான் என பல பிரபலங்கள் நடித்திருந்தாலும் ஒரு கதாபாத்தியமாக இருந்த ஹைனா என்ற மிருகம் அந்த திரைப்படத்தில் ஒரு சுவாரஷ்யத்தை ஏற்படுத்தி இருந்தது. அதில் விஜய் சுப்ரமணி என்று கூப்பிடும் போது செம மாஸாக வந்து நிற்கும் அந்த காட்சி அனைவருக்கும் பிடித்துவிட்டது. 


இந்நிலையில் குழந்தைகளும் பார்த்து ரசித்த இந்த திரைப்படம் அவர்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. சமீபத்தில் பாடசாலை சுற்றுலா மேற்கொண்டு இருந்த குழந்தைகள்  Zoo-வில் இருந்த ஹைனாவை கண்டு சுப்ரமணி என அழைத்துள்ளர். இந்த அருமையான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ... 


Advertisement

Advertisement