• Jan 01 2025

'சின்ன சின்ன கண்கள்' பவதாரணியின் மெல்லிய குயிலிசையில் ரிலீஸ்! முழு வீடியோ இதோ

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

இளைய தளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் விஜய் அப்பா. மகன் என இரண்டு கேரக்டரில் நடித்துள்ளார்.

விஜய் இன்று தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக தனது பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என தெரிவித்திருந்தார்.

அத்துடன் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்திடவும் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இந்த உத்தரவு, கட்டளையெல்லாம் அவருடைய கட்சிக்காரர்களுக்கு மட்டும் தானே தவிர அவருடைய ரசிகர்களுக்கு கிடையாது.


யுவன் சங்கர் ராஜா இசையமைத்த முதலாவது பாடல் ஏற்கனவே வெளியாகி கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. அந்தப் பாடல் பெருமளவில் ரீச் ஆகவில்லை என்றே கூறலாம்.


இந்த நிலையில், இன்றைய தினம் விஜயின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு விஜய் பாடிய இரண்டாவது பாடல் தற்போது ரிலீசாகியுள்ளது. இதனை யுவன் சங்கர் ராஜா ரிலீஸ் செய்துள்ளார்.


குறித்த மெலடி பாடலில் அண்மையில் உயிரிழந்த யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி பவதாரணியின் குரல் தொழில்நுட்பத்தின் மூலம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பாடல் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.


Advertisement

Advertisement