• Dec 26 2024

பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் நடிகர், நடிகைகள்.. குஷ்புவுக்கு எந்த தொகுதி?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

இந்தியாவில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தேர்தலில் பல திரையுலக பிரபலங்கள் போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரபலமான குஷ்பு தென் சென்னை அல்லது மத்திய சென்னையில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. குஷ்பு போட்டியிட பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் அனுமதி கொடுத்து விட்டதாகவும் இதையடுத்து அவர் விரைவில் தேர்தல் பணிகளை தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி மேலும் சில திரையுலக பிரபலங்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய நடிகை கௌதமி அதிமுகவில் சேர்ந்த நிலையில் அவருக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் கௌதமிக்கு முன்பே அதிமுகவில் சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



கமல், ரஜினியுடன் நடித்த நடிகை ஷோபனா பாராளுமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. மேலும் கொச்சி தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிட போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் டெல்லியில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு பாரதிய ஜனதா கட்சி அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் தெலுங்கு திரை உலக பிரபலமான பவன் கல்யாண் உள்பட பல திரையுலக நட்சத்திரங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement