• Dec 26 2024

நேபாளில் குளிர் காயும் ஜோதிகா? சூர்யாவை காணலயே அப்ப யாரோட போயிருப்பாங்க?

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

நடிகர்கள் , நடிகைகள் தங்களது பொழுதை கழிக்க சுற்றுலா செல்லும் விடீயோக்கள் , புகைப்படங்கள் வைரலாகுவது வழக்கமான ஒன்றே ஆகும். அவ்வாறு பலரது விருப்பத்துக்குரிய நடிகையான ஜோதிகா நேபாள் சென்ற விடியோவை வெளியிட்டு உருக்கமாக பேசியுள்ளார்.


முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பின்னர் ஒருசில படங்களில் மாத்திரை நடித்து வருகின்றார். தற்போது சூர்யாவுடன் இணைந்து ஒரு படம் நடிக்க போவதாகவும் கூறி இருந்த நிலையில் சுற்றுலாவுக்காக நண்பர்களுடன் நேபாள் சென்றது மட்டுமின்றி அதனை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.


நேபாளத்தில் மலைகல் , கடல்கள் , பனி குளிர்கள்  என உட்சாகமாக திரிந்த அவர் இன்ஸ்டா பதிவில் குறிப்பிடுகையில்" நேபாளில் செங்குத்தான மலைகளில் இருந்து குளிர் வரை , ஆறுகள் முதல் நீர்வீழ்ச்சி வரை அனுபவித்ததாகவும் மேலும்பல சாகசங்கள் செய்ததாகவும் , எங்களுடன் மலைக்கு எங்கள் பொருட்களை தூக்கி வந்த மிஷன் ராய்க்கு நன்றி என்றும் மலையில் வாழும் நேபாள் மக்கள் நிஜ வாழ்க்கை ஹீரோக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்" இது பல ரசிகர்களால் பாராட்ட பட்டு வந்தாலும் குறித்த வீடியோவில் எங்குமே சூரியா இல்லாததால் யாரோடு சென்றார் என்று விமர்சிக்கப்பட்டும் வருகின்றார். 


Advertisement

Advertisement