• Dec 26 2024

கலர்ஸ் டிவியில் புதிய ஆன்மீக சீரியல்.. சன் டிவி ‘ராமாயணம்’ சீரியலுக்கு போட்டியா?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ‘ராமாயணம்’ தொடர் ஆரம்பித்த நிலையில் அதற்கு போட்டியாக கலர்ஸ் டிவியில் ஒரு புதிய ஆன்மீக தொடர் இருப்பதாக தெரிகிறது.

சன் டிவியில் கடந்த மே மாதம் முதல் ‘ராமாயணம்’ தொடர் வெளியாகி வருகிறது என்பதும், ஹிந்தியில் வெளியான இந்த சூப்பர் ஹிட் தொடரை தமிழில் டப் செய்து சன் டிவி வெளியிட்டு வருகிறது என்றும், இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது ஆன்மீக ரசிகர்களை கவர்வதற்காக கலர்ஸ் டிவி அதிரடியாக 'சிவசக்தி திருவிளையாடல்’ என்ற புதிய ஆன்மீக சீரியலை ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு இந்த தொடர் வெளியாகும் நிலையில், சிவபெருமான் பக்தர்களுக்கு இந்த தொடர் ஒரு ஆன்மீக விருந்தாக உள்ளது.



மிகுந்த பொருட்செலவில், பிரமாண்டமான செட் அமைத்து உருவாக்கப்பட்டுள்ள ’சிவசக்தி திருவிளையாடல்’ தொடரில் திகில் திருப்பங்கள், விறுவிறுப்பு, சுவாரஸ்யம் ஆகியவை உள்ளதால் இந்த தொடர் ஹிட்டாகியுள்ளது. கண்களை ஆச்சரியப்படுத்தும் பளபளப்பான செட் அமைப்புகள், நேர்த்தியான கதாபாத்திர தேர்வு, கிராபிக்ஸ் மூலம் நிகழ்த்தும் மாயாஜாலம் ஆகியவை இந்த தொடரில் உள்ளது

தற்போது ‘ராமாயணம்’ மட்டுமே ஆன்மீக தொடராக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ’சிவசக்தி திருவிளையாடல்’ என்ற ஆன்மீக தொடரும் வெளியாகி உள்ளதை அடுத்து ஆன்மீக பார்வையாளர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement