• Apr 24 2026

வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு.! உள்ளே சென்றதும் அதிரடி காட்டிய வினோத்தின் மனைவி

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் 78 நாட்களை கடந்து விட்டது.  இறுதியாக இடம்பெற்ற டபுள் எவிக்ஷனில் FJ மற்றும் ஆதிரை வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் வீட்டு தலையாக கமருதீன் காணப்படுகின்றார். 

பிக் பாஸில்  ஒவ்வொரு  சீசனிலும் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்)  நடைபெறும். இது பார்ப்பதற்கே சுவாரஸ்யமாக காணப்படும். அந்த வகையில் தற்போது இந்த சீசனிலும் இந்த டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில்,  இன்றைய தினம் வெளியான முதலாவது ப்ரோமோவில், கானா வினோத்தின் மனைவியும் குழந்தைகளும்  பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.  

அவர்களைப் பார்த்த வினோத் எமோஷனலாகி அழுகின்றார். இதன் போது அவருடன் பேசிய மனைவி, உன்னோட கேம்ல நீ வின் பண்ணனும்னா கோபப்படாமல் இரு.. ஒழுங்கா இருக்கிற வழியை பாரு.. வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு.. இங்க வேணா.. என சொல்லி சிரிக்கின்றார். 


நேற்றைய தினம் பிரஜின் சாண்ட்ராவின் பிள்ளைகள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததும், சாண்ட்ரா அழுததும்,  குழந்தைகள் அழுததும் அவர்களின் சுட்டித்தனமாகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

தற்போது  கானா வினோத்தின் குடும்பம் உள்ளே வந்துள்ளது. அடுத்தடுத்து யார் வர இருக்கின்றார்கள்  என்பதையும், என்னென்ன சம்பவங்கள் நடைபெறும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement