• Apr 19 2025

சசிகுமார் படத்திற்கு உடனடியாக தடைவிதிக்குமாறு புகார்! தமிழ் சினிமாவை உலுக்கிய சம்பவம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் இறுதியாக வெளியான ஜப்பான் படம் தோல்விப் படமாக அமைந்தது. இந்த  படத்தில் நடிகர் கார்த்திக் நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம்  ரசிகர்களுக்கு சலிப்பை தான் கொடுத்தது.

இதை தொடர்ந்து இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் புதிய படம் தான் 'மை லார்ட்'. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சைத்ரா நாயகியாக நடிக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானதோடு சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது.

d_i_a

சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் கோவில்பட்டி பிரதேசத்தை சுற்றி எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள்  முடிவடைந்து உள்ளதாகவும் அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா, அனுராக் காஷ்யப், கன்னட நடிகர் ராஜ். பி ரெட்டி, தெலுங்கு இயக்குனரான க்ரிஷ் மற்றும் மலையாள இயக்குனர் ஆன லிஜோ ஜோஸ் ஆகியோர் வெளியிட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் சசிகுமார் நடிக்கும் ' மை லார்ட்'  படத்திற்கு தடை விதிக்குமாறு சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ.செல்வம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியான போது அதில் படத்தின் கதாநாயகனான சசிகுமாரும் கதாநாயகியும் புகை பிடித்துக் கொண்டுள்ளார்கள்.  இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது சமூக ஆர்வலர் புகார் கொடுத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement