• Dec 25 2024

பரீட்சைக்கு வாழ்த்துக்கூறிய விஜய்! பொதுத்தேர்வில் சித்தி அடையும் மாணவர்களுக்கு அடுத்த பாராட்டுவிழா ரெடி!

subiththira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் மட்டுமன்றி இந்திய அளவில் பெரிய ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் தளபதி விஜய். சினிமா பின்னணியோடு சினிமாத்துறைக்குள் வந்திருந்தாலும், தனது பாணியில் நடித்து கியூட் ஆனா ரியாக்சன்களாலும் , அருமையான நடனத்தினாலும் தளபதி என்ற தனது அடை யாளத்தை பதித்து வைத்துள்ளார்.


இவரது ஒவ்வொரு படமுமே வருவதற்க்கு முன்பே பெரிய அளவில் பேசப்பட்டு பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும். ஆனால் ரசிகர்களுக்கும், இந்திய அரசியல் வாதிகளுக்கும் ஆச்சரியம் ஊட்டும் வகையில் தற்போது நடித்து வரும் "கோட்" திரைப்படத்துடன் சேர்த்து இன்னும் ஒரே ஒரு திரைப்படம் மாத்திரமே நடிக்கப்போவதாகவும், இனி சினிமாவை விட்டு விலக போவதாகவும். அவர் ஆரம்பித்த கட்சியின் பெயர் "தமிழக வெற்றிக்கழகம்" என்றும் கூறியது மட்டும் இன்றி உறுப்பினர்களையும் சேர்க்க ஆரம்பித்துள்ளார். 


இந்தநிலையிலேயே தளபதி விஜய் அவர்கள் தனது x தல பக்கத்தில் இம்முறை நடைபெற உள்ள 10 வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வாழ்த்து கூறி உள்ளார். 12 வகுப்பு பொதுத்தேர்வில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு ஏற்கனவே பரிசுகள் வழங்கி பாராட்டி இருந்த நிலையில் குறித்த இந்த பதிவு வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement