• Dec 26 2024

congratulations பூர்ணிமா.. திடீரென பூர்ணிமாவுக்கு வாழ்த்து கூறிய பிரதீப்! ஆனாலும் அதிலொரு வில்லங்கம்?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 98 வது நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்கின்றது.  

பிக் பாஸ் வீட்டில் இறுதி வரை சென்று வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பிய சம்பவம் இன்று மட்டும் சமூக வலைத்தளங்களில் புகைந்து வருகின்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப், தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நபர்களை விளாசி வருகிறார்.


கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியுடன் வெளியேறிய பூர்ணிமாவை, அவரது அம்மாவுக்கு கொடுத்த வாக்குக்காக விட்டு வைப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில், பிக் பாஸ் பூர்ணிமாவின் 'செவப்பி' பட டீசர் வெளியான நிலையில், அவருக்கு வில்லங்கமான வாழ்த்து ஒன்றை பதிவிட்டுள்ளார் பிரதீப்.

இவ்வாறு அவர் வெளியிட்ட பதிவில், 'வாழ்த்துக்கள் பூர்ணிமா அது திறமை என்று அழைக்கப்படும். ஆனால் பிரதீப் இன்னும் வாய்ப்புகளை தேடி பண பிச்சைக்காகவும், பாத்ரூம் தப்பால் பற்றியும் புலம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.  

Advertisement

Advertisement