• Feb 01 2025

இவங்களுக்கும் குழந்தை கிடைச்சுட்டா.? வானத்தைப்போல சீரியல் நடிகருக்கு குவியும் வாழ்த்து

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவி மற்றும் சன் டிவி ஆகிய சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர்தான் அஸ்வின் கார்த்திக். இவர் சென்னையை சேர்ந்தவர். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே திரையில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதால் திரைப்பட வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்துள்ளார். இதன் போதே அவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் நடித்திருந்தார். ஆனால் அதில் இவருடைய கேரக்டர் பெரிதாக கவனிக்கப்படவில்லை. அதன்பின்பு அரண்மனைக்கிளி, மனசு, குலதெய்வம் போன சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

அஸ்வின் கார்த்திக் பெரும்பாலும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து வந்த நிலையில் இவருக்கு ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது சன் டிவியில் ஒளிபரப்பான வானத்தைப்போல சீரியல். கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஒளிபரப்பான இந்த சீரியலில் ஆரம்பத்தில் நெகட்டிவ் ஆக இவர் காட்டப்பட்டாலும் அதன் பின்பு பாசிட்டிவாக பல ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.


இதை தொடர்ந்து மேக்கப் ஆர்டிஸ்ட் ஆன காயத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. அதில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியும் இருந்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் தனது மனைவியின் பிரக்னன்சியை அறிவித்த கார்த்திக்குக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது இதனை அறிந்த ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் கார்த்திக் தம்பதியினருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

இதேவேளை சின்னத்திரை பிரபலங்களான இந்திரஜா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதேபோல சினேகன் கன்னிகா  தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement