• Apr 03 2025

ஜெயிலுக்குள் சென்ற குக் வித் கோமாளி பிரபலம் சுஜிதா..!

Mathumitha / 2 days ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நடிகைகள் தற்போது வெள்ளித்திரை நடிகைகளையும் முந்தி பெரிய வரவேற்பை பெற்று வருகின்றனர். சின்னத்திரை பிரபலங்கள் ஒரே மாதிரியான பிராஜக்ட் முடித்ததும் அடுத்ததாகவும் புதிய வாய்ப்புகளில் கமிட்டாகி செல்கிறார்கள்.


இந்த மாற்றத்தை தொடர்ந்து தற்போது ஒரு பிரபல சீரியல் நடிகையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலின் மூலமும் குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சியின் மூலமும் பிரபலமான நடிகை சுஜிதா தற்போது தனது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். 


அந்த வீடியோவில் அவர் அந்தமானின் பிரபலமான Cellular Jail க்கு சென்றதை பதிவு செய்துள்ளார். அங்கு பார்வையிடப்பட்ட முக்கிய இடங்களை அவர் வீடியோவாக பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவியுள்ள நிலையில் அது வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement