• Oct 26 2024

'இன்டைக்கு ஸ்பெஷல் மேக்கப்ல இருக்கன்' கேமரா முன் பேசிய கூல் சுரேஷ்! மென்டலா இவன் என கலாய்க்கும் கும்பல்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


இந்த நிலையில் பிக்பாஸ் கேமரா முன் பேசிய கூல் சுரேஷ், 'இன்டைக்கு என் பெர்த் டே. அதால ஸ்பெஷலா மேக்கப் போட்டு இருக்கன்'.இந்த பாருங்க என முகத்தில் வரைந்து இருக்கும் பலூன்களை காட்டுகிறார்.

மேலும் தனக்கு மேக்கப் போட்டு விட்ட ரவீனாவை பங்கமாக கலாய்த்துள்ளார். அதுமட்டுமின்றி ரவீனா இதுக்காக மும்பையில் போய் மேக்கப் பழகியதாகவும், உங்க குழந்தைகளின் பெர்த் டேக்கு மேக்கப் போடணும் என்றா ரவீனாவின் மேனேஜர் மணியை தொடர்பு கொள்ளுங்க என இருவரையும் செம்மையாக கலாய்த்து பேசியுள்ளார் கூல் சுரேஷ்.


இதேவேளை, இன்றைய தினம் பிறந்த நாளை கொண்டாடும் கூல் சுரேஷ்க்கு பைக் பாஸ் வீட்டில் வைத்து கேக் வெட்டி கொண்டாடியமையும் குறிப்பிட்டத்தக்கது. 


Advertisement