• Dec 26 2024

எதிர்நீச்சல் சீரியல் குணசேகரனுக்கு எகிறும் சம்பளம்! மாரிமுத்துவின் மறைவால் அடித்த ஜாக்பாட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் பெண் ஒடுக்கு முறையை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் குணசேகரன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் மாரிமுத்து. எனினும் அவரது மறைவு அனைவருக்கும் பெரும் இழப்பாக காணப்பட்டது. 

இதை தொடர்ந்து, குணசேகரன் கேரக்டருக்கு வேலராமமூர்த்தி மாஸ் என்ட்ரி கொடுத்து நடித்து வந்திருக்கிறார். இவருக்கான வரவேட்பு எல்லாம் பலமாகத்தான் இருந்தது.


ஆனால் போகப் போக ஒவ்வொரு நாளும் இந்த புது குணசேகரனின் நடவடிக்கைகள், பேச்சு, அடாவடித்தனமான வன்மம் இது எல்லாம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்து எரிச்சல் அடைய வைத்து வருகிறது. 

இதனால் இதுவரை டிஆர்பில் டாப்பில் இருந்த எதிர்நீச்சல் சீரியல் கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்கு சென்று டிஆர்பி ரேட்டிங்கில் அடிப்பட தொடங்கிவிட்டது. முக்கியமாக இந்த புது குணசேகரன் அவருடைய கேரக்டரை மொத்தமாக சொதப்பியதால் நாடகத்திற்கு எதிர்மறையான கமெண்ட்ஸ்கள் வர ஆரம்பித்துவிட்டது. எனினும், நாளடைவில் அவரின் நடிப்பும் மக்கள் மத்தியில் ரசிக்கப்ட்டது. 


இந்த நிலையில், அவர் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற விபரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, எதிர்நீச்சல் தொடரில் நடிப்பதற்கு மாதத்திற்கு10 லட்சத்தில் இருந்து கிட்டத்தட்ட 20 லட்சம் வரை வாங்கி வருகிறாராம் வேலராமமூர்த்தி. 

Advertisement

Advertisement