• Dec 25 2024

அவமானத்தின் உச்சியில் நடையை கட்டிய குணசேகரன்.. வேட்டைக்கு தயாரான சிங்கப்பெண்கள்! புதிய திருப்பத்தில் எதிர்நீச்சல்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. இது இந்த சீரியலின் புது திருப்பத்தை காட்டுபவனாக காணப்படுகிறது.

அதன்படி குணசேகரன் இத்தனை நாள் போட்டு வந்த ஆட்டத்தை அடக்கும் வகையில் தர்ஷினி கல்யாண மண்டபத்தில் இருந்து வெளியேறி ஜீவானந்தத்துடன் போட்டிக்கு பங்கு பெற்ற போகிறார்.

இதை தொடர்ந்து மண்டபத்திலிருந்த ஈஸ்வரி குணசேகரனை வெளுத்து  வாங்குகிறார். எதுவுமே பேச முடியாத நிலையில் குணசேகரன் வாய் அடைத்து இருக்கிறார்.


இதை தொடர்ந்து திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறிய குணசேகரன் வீட்டு மருமகள்கள் சிங்கப்பெண்களாக வெற்றி நடை போட்டு வந்ததோடு, இந்த கொண்டாட்டத்தைக் கொண்டாடும் விதமாக குணசேகரன் வீட்டுக்கும் தங்களுக்கும் இடையில் உள்ள உறவை  வெட்டுவதாக சொன்னதோடு, இனி கலைகளில் ஆட்டம் ஆட இருப்பதாக சொல்லி உள்ளார்கள்.

அதேவேளை, எல்லார் முன்னிலையிலும் அசிங்கப்பட்ட குணசேகரன் வீட்டில் இருந்து கிளம்பி காவி வேட்டி சட்டையுடன் யாத்திரை செல்வதை போல தெரிகிறது. 

எனவே இதுவரை ஆட்டம் போட்ட குணசேகரனின் ஆட்டம் அடங்கி, முதல் தடவையாக பெண்கள் வெற்றி பெற்று உள்ளார்கள். இனி இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகரும் என ரசிகர்கள் எதிர் பார்கின்றமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement