• Dec 25 2024

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் முன்னாள் சிஎஸ்கே வீரர்கள்.. களை கட்ட போகுது இந்த வாரம்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் முன்னாள் சிஎஸ்கே வீரர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால் இந்த வாரம் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி புத்தம் புதிய வடிவத்தில் 10 குக்குகள் மற்றும் 10 கோமாளிகளுடன் ஆரம்பித்தது என்பதும் ஆரம்பிக்கும் முன்னர் ஒரு சில பிரச்சனைகள் இருந்தாலும் மற்ற சீசன்களை போலவே இந்த சீசனிலும் குக்குகள் மற்றும் கோமாளிகள் காமெடி செய்து வருகிறார்கள் என்பதும் கலகலப்பாக இந்த சீசனும் சென்று கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் கிராமத்து சமையல் எபிசோடு நடந்த நிலையில் பானையை கையில் வைத்துக்கொண்டு குக்குகளும் கோமாளிகளும் செய்த காமெடி ரசிக்கும் வகையில் இருந்தது. இந்த நிலையில் இந்த வாரத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அதில் முன்னாள் சிஎஸ்கே வீரர்களான லட்சுமிபதி பாலாஜி மற்றும் பத்ரிநாத் ஆகிய இருவரும் வருகை தந்துள்ளனர்.

ஏற்கனவே இருவரும் ஐபிஎல் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தமிழில் வர்ணனை செய்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் கலகலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் இந்த ஆண்டு லட்சுமிபதி பாலாஜி மற்றும் பத்ரிநாத் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement