பிக்பாஸ் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால், தனது நண்பரான நவனீத் மிஸ்ராவை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகள் இன்று தல பொங்கலை கொண்டாடி உள்ளனர். அந்த போட்டோவை சாக்ஷி அகர்வால், தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது வைரலாகி வருகிறது.
சாக்ஷி அகர்வாலுக்கு கடந்த மாதம் கோவாவில் திருமணம் நடந்து முடிந்து. குழந்தை பருவத்தில் இருந்தே நண்பராக இருந்த நவனீத் மிஸ்ரா என்பவரை தான் சாக்ஷி அகர்வால் காதலித்து வந்த நிலையில்,தங்கள் காதலை பெற்றோரிடம் சொல்லி, அவர்களின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய இவர்கள் அழகிய புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்கள்.
சாக்ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில், தனது காதல் கணவருடன் இருக்கும் போட்டோவை போட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போட்டோவில் சாக்ஷியின் கணவர் கிறிஸ்தவராக இருந்தாலும் தமிழ் பையன் போல வேட்டி சட்டையில் அட்டகாசமாக இருக்கிறார். இந்த போட்டோ இணையத்தில் வைரலான நிலையில், ரசிகர்கள் பலரும் சாக்ஷி அகர்வாலுக்கு தல பொங்கல் வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள். இதோ அந்த அழகிய புகைப்படங்கள்.
Listen News!