• Sep 10 2025

வாழ முடியவில்லை...சூரிய ஒளியையே காணவில்லை...!நீதிமன்றத்தில் தர்ஷனின் வாக்குமூலம்...!

Roshika / 5 hours ago

Advertisement

Listen News!

பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகர் ரேணுகாசாமியை கொலை செய்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில்,  மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜரான தர்ஷன், தனது வாழ்க்கை தற்போது மிகுந்த துன்பத்தில் இருப்பதாக உணர்ச்சிபூர்வமாக மனமுவந்தார்.

அவர் நீதிபதியிடம் கூறியதாவது: "நான் பல நாட்களாக சூரிய ஒளியைப் பார்க்கவில்லை. சுற்றும் சூழல் பூஞ்சைகளால் நிரம்பி உள்ளது. நான் அணிந்திருக்கும் ஆடைகூட துர்நாற்றம் வீசுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் வாழ முடியாது. குறைந்தபட்சம் எனக்கு விஷமாவது கொடுங்கள். வாழ்க்கை மிகவும் பரிதாபகரமாக உள்ளது."


இதற்கு பதிலளித்த நீதிபதி, “அப்படி செய்ய முடியாது” எனத் தெளிவாக மறுத்தார். தர்ஷனின் இந்த உருக்கமான பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Advertisement

Advertisement