• Sep 11 2025

துல்கர் சல்மானின் ‘Lokah’ – இன்றுவரை ரூ.202 கோடி? அதிகாரபூர்வ தகவல் இதோ...!

Roshika / 14 hours ago

Advertisement

Listen News!

துல்கர் சல்மானின் தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள ‘Lokah’ திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருவதோடு, வசூலில் மாபெரும் சாதனையை பெற்றுள்ளது. இப்படம் உலகமெங்கும் ரூ.202 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


திரைப்படத்தின் கதைக்களம், அதன் தனித்துவமான ஒளிப்பதிவு, வித்தியாசமான திரைக்கதை மற்றும் நடிகர்களின் நுட்பமான நடிப்புக்காக பாராட்டுகளை பெற்றுள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்களிடமும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


‘Lokah’ படம் துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இது நடிகருக்கே மட்டும் அல்லாமல் தயாரிப்பாளராகவும் ஒரு முக்கிய வெற்றியைத் திரட்டிக் கொடுத்துள்ளது.

கல்யாணி பிரியதர்ஷனின் அழுத்தமான நடிப்பு, நஸ்லனின் மனமகிழ்ச்சியான இயல்பு மற்றும் நுணுக்கமான கதைக்களம் படம் முழுவதும் ரசனை உருவாக்கியுள்ளது. இதனை ஒட்டி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் படம் குறித்து உருக்கமான பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement