தமிழ் திரையுலகில் தனது தனிப்பட்ட நடிப்புத்திறன் மற்றும் நேர்த்தியான பாத்திர தேர்வுகளால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ரவி மோகன், இன்று தனது 45வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தொழில்நுட்ப ஊடகங்களிலும் ரசிகர்களிடையிலும் வாழ்த்து மழை பெய்து கொண்டிருக்கிறது.
தற்போது, அவர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் உருவாகும் ‘கராத்தே பாபு’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதற்குபின், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரது கதாபாத்திரம் திரைக்கதை முழுவதற்கும் முக்கியமான தூணாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், தற்போது தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி, ஒரே நேரத்தில் மூன்று புதிய திரைப்படங்களை உருவாக்க உள்ளார். அதில் முதன்மையாக, இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்கிறார். இரண்டாவது படத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடிக்க, ரவி மோகன் தயாரிப்பாளராக இயங்குகிறார்.
இந்நிலையில், "பராசக்தி" பட இயக்குநர் சுதா கொங்கரா, தனது சமூக வலைத்தளத்தில் அவரை பற்றி பதிவிட்டுள்ளார்: “படப்பிடிப்பு தளத்தில் அமைதியான இடத்தில் ரவியை காணலாம். எப்போதும் தயாராக, 200% ஈடுபாடுடன் நடித்துக் கொண்டிருப்பவர். என் ஜென்டில்மேன் நடிகரே, உங்களுடன் பணியாற்றுவது மிகச் சிறந்த அனுபவம்!” பிறந்த நாள் வாழ்த்துகள் ரவி மோகன்! மேலும் பல வெற்றிகள் கிடைக்க வாழ்த்துக்கள்!
Listen News!