• Sep 10 2025

சூப்பர் ஸ்டாரை சீண்டிய சின்ன தளபதி.. 1000 ம் கோடிக்கு சொன்ன கதை தெரியுமா?

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் மதராஸி. இந்த படத்தில் எஸ்.கேக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

மதராஸி படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன் . இப்படம் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ் திரையுலகில் எந்த படமும் 1000 கோடிகளை வசூலிக்கவில்லை எனவும், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் படம் பற்றியும் மனம் திறந்துள்ளார் சிவகார்த்திகேயன்.


அதன்படி அவர் கூறுகையில், தமிழ் சினிமா கூடிய விரைவில் 1000ம் கோடியை அடிக்கும். சில தமிழ் படங்கள் 1000ம் கோடியை அடிக்க தவறி விட்டன. நமக்கு டிக்கெட் விலையும் குறைவு. ஆனால் அதற்காக டிக்கெட் விலையை அதிகரிக்க சொல்லவில்லை.

பெங்களூரு, மும்பை டிக்கெட் விலை எமக்கு இருந்து இருந்தால் ஜெயிலர் 1000ம் கோடியை அடித்து இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement