• Sep 10 2025

அமைதியாக நடந்த கிரேஸ் ஆண்டனியின் திருமணம்...!ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புகைப்படங்கள்!

Roshika / 12 hours ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் நடிகையாக பயணத்தைத் தொடங்கி, தற்போது தமிழ் திரை ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ள கிரேஸ் ஆண்டனி, தன்னுடைய திருமணத்தை குறித்த தகவலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.


முதலில் 2016ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படமான ‘ஹேப்பி வெட்டிங்’ மூலம் silver screen-ல் அறிமுகமான கிரேஸ் ஆண்டனி, பின்னர் ‘கும்பலாங்கி நைட்ஸ்’ படத்தில் பகத் பாசிலின் மனைவியாக நடித்ததன் மூலம் பரவலான கவனம் பெற்றார். அவரது பங்களிப்பு விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.


இயக்குநர் ராம் இயக்கிய ‘பறந்து போ’ திரைப்படம் மூலம் தமிழில் கால் பதித்த கிரேஸ் ஆண்டனி, அந்தப் படத்தில் தனது இயல்பான நடிப்பால் பாராட்டுகளை பெற்றார். இப்படம் வெற்றிபெற்று, அவருக்கு தமிழகத்தில் மேலும் பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது.


இந்நிலையில், தனக்கென்று அமைதியான முறையில் திருமணத்தை முடித்துக் கொண்டதாக கிரேஸ் ஆண்டனி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். "கூட்டமில்லாமல், லைட்டுகள் இல்லாமல், சப்தமில்லாமல் நடந்த திருமணம்" எனக் குறிப்பிட்டுள்ள அவர், தனது புதிய வாழ்க்கையின் தொடக்கத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பதை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.


இந்தக் கருத்துக்களுக்கு திரையுலகின் பல பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.









Advertisement

Advertisement