• Sep 10 2025

KPY பாலாவின் உண்மையான கேரக்டர் இதுதான்... உடைத்து பேசிய பிரபலம்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடியார்களாக கலக்கி வந்த பலர் இன்று கதாநாயகர்களாக  களம் இறங்கி  வெற்றி கண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது சந்தானம், ஜோகி பாபு, சதீஷ் இவர்களின் வரிசையில் கேபிஒய் பாலாவும் இணைந்துள்ளார். 

சின்னத்திரையில் காமெடியனாக கலக்கி வந்த கேபிஒய் பாலா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காந்தி கண்ணாடி. இந்தப் படம் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதோடு இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை பார்த்த பலர், கண்   கலங்கியதாகவும் இதனால்  பாலாவுக்கு பலத்த ஆதரவு கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தனர். 

எனினும் கேபிஓ பாலாவுக்கு தியேட்டர்கள் சரியாக கிடைக்கவில்லை என்றும், போஸ்டர்களையும் கட் அவுட்டுகளையும் அடித்து  நொறுக்கியதாகவும்   தனது மன வேதனையை தெரிவித்திருந்தார்.  ஆனாலும்  நாளுக்கு நாள் காந்தி கண்ணாடி படத்தின் வசூல் அதிகரித்து பாலாவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. 

இந்த நிலையில்,  கேபிஒய் பாலாவை காசுக்காக பயன்படுத்துகின்றார்கள் என  ஹரி கிருஷ்ணன் பேட்டி கொடுத்துள்ளார். 


அதன்படி அவர் கூறுகையில், பாலா போன்றவர்கள் புல் பில் பண்றாங்க  என்றுதான் நினைக்கின்றேன்.. அவங்க மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்றாங்க .. 

நாங்க செய்றது இடது கைக்கு தெரிஞ்சா என்ன? வலது கைக்கு தெரிஞ்சா என்ன?  என்று யாராவது ஒருவர்  இதனை பார்த்து  அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்  என்ற நோக்கம் தான் அவர்களுக்கு... 

மேலும் பாலாவின் நற்செயல்களை சூர்யாவின் அகரத்துடன் ஒப்பிட முடியாது..  வந்தோம். செஞ்சோம். போனோம் என்று இருக்க முடியாது..  இப்ப நாங்க ஒருவருக்கு உதவி செய்யும் போது அவர்களுடன் பயணித்து அவர்களை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்று இறுதிவரை பயணிப்பது என்பது வேறு..  அதனை பாலாவுடன் ஒப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement