• Dec 25 2024

கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி மண்டையை ஆட்டிய தர்ஷினி! ஜனனி கொடுத்த பதிலடி

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியல் அளவு கடந்த ரசிகர்களை தன் பக்கம் கட்டிப்போட்டு வைத்துள்ளது. இதில் இன்றைய தினம் என்ன நடக்கும் என பார்ப்போம்.

அதில், ஜீவானந்தம் மனைவி விஷயத்துல என்ன நடந்தது என்று எனக்கு தெரியும் என்று நந்தினி சொல்ல, கதிர் அதிர்ச்சி அடைகிறார்.

இதைத் தொடர்ந்து ஜனனியின் அத்தை, உண்மையா உங்க பொண்ணுக்கு இதைவிட நல்ல வாழ்க்கை கிடைக்குமா என கேட்க, அதற்கு ஜனனி அதுல அவங்க இறுக்கமும்விருப்பமும் அவசியம் என சொல்லி பதிலடி கொடுக்கிறார்.


இதை அடுத்து தர்ஷினியிடம், உமையா உனக்கு அம்மா மாதிரி உன்ன ரொம்ப நல்லா பார்த்திருப்பாங்க. உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தானே என்று குணசேகரன் கேட்க, அதற்கு சம்மதம் என தலையாட்டுகிறார் தர்ஷினி. இதை பார்த்த ஜனனி, ஈஸ்வரி என அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

இறுதியாக, பார்த்தியா என் பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டா என்று சொல்லி சந்தோஷப்படுகிறார் குணசேகரன். இதுதான் இன்றைய நாளுக்கான ப்ரோமோ.

Advertisement

Advertisement