• Dec 27 2024

ஜீ டிவியின் புதிய சீரியலில் இணைந்த ‘தெய்வமகள்’ அண்ணியார்.. வில்லன் அவதாரமா?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

ஜீ டிவியில் விரைவில் ’நெஞ்சத்தை கிள்ளாதே’ என்ற சீரியல் ஆரம்பமாக இருக்கும் நிலையில் இந்த சீரியலில் ’தெய்வமகள்’ சீரியலில் அண்ணியார் கேரக்டரில் நடித்தவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

’நெஞ்சத்தை கிள்ளாதே’ என்ற டைட்டிலில் ஒரு சீரியல் ஏற்கனவே ஜீ டிவியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒளிபரப்பான நிலையில் தற்போது மீண்டும் அதே டைட்டிலில் புதிய சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த சீரியலில் ஜெய் ஆகாஷ், கௌதம் என்ற கேரக்டரிலும், ரேஷ்மா முரளிதரன், மதுமிதா என்ற கேரக்டரிலும் நடிக்க உள்ளனர். மேலும் இந்த சீரியலில் ஷ்யாம் விஸ்வநாதன், கிருத்திகா உள்ளிட்ட சிலரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.



ஏற்கனவே இந்த சீரியலின் மூன்று டீசர்கள் அடுத்தடுத்து வெளியாகி இந்த சீரியலும் பெரும் எதிர்பார்ப்பு கிடைத்துள்ள நிலையில் தற்போது இந்த சீரியலில் ’தெய்வமகள்’ சீரியலில் அண்ணியார் கேரக்டரில் நடித்த ரேகா கிருஷ்ணப்பா என்பவர் நடிக்க இருப்பதாக தகவல் வழியாக உள்ளன. ’தெய்வமகள்’ சீரியல் மட்டும் இன்றி தமிழும் சரஸ்வதியும், திருமகள், சீதாராமன் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்த நிலையில் இவர் ’நெஞ்சத்திற்கு கிள்ளாதே’ சீரியலில் நாயகன் ஜெய் ஆகாஷ் அம்மாவாகவும் மெயின் வில்லியாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சித்தார்த் என்பவர் இந்த சீரியலில் இணைந்துள்ளதாகவும் இவர் கயல், கண்ணான கண்ணே, சீதாராமன் உள்ளிட்ட சீரியலில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தவர் என்றும் தெரிய வருகிறது. விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் நேரம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

45 வயதான நாயகன் மற்றும் 35 வயதான நாயகி ஆகிய இருவரும் தங்களுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில், இருவரும் திடீரென திருமணம் செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் இந்த சீரியலின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement