• Dec 26 2024

அம்மாவுக்கு இந்த நடிகர் தான் பொருத்தம்,- ஓபனாகப் பேசிய தேவயாணியின் மகள்கள்- அப்பாவுக்கு முன்னாடியே சொல்லிட்டாங்களே

stella / 11 months ago

Advertisement

Listen News!


தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தேவயாணி. இவர் முன்னணி ஹீரோக்களாக இருந்த விஜய், விஜயகாந்த், சத்தியராஜ், பிரபு, சரத்குமார், பார்த்திபன் என பலருடனும் ஜோடி  போட்டு நடித்தார்.

கிட்டத்தட்ட 7 மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தேவயாணி முதன் முதலில் தமிழில் அறிமுகமான படம் தொட்டாசினுங்கி என்னும் திரைப்படத்தின் மூலம் தான்.இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது காதல் கோட்டை திரைப்படம் தான்.


தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது இயக்குநர் ராஜகுமாரனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரு மகள்கள் இருக்கின்றனர்.

தொடர்ந்து தேவயாணி சீரியல் மற்றும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.இந்த நிலையில் இவர் தன்னுடைய குடும்பத்துடன் இணைந்து ஒரு பேட்டியளித்திருந்தார். அதில், தேவயாணியின் மகள்களிடம் அம்மா நடித்த படங்களிலேயே எது உங்களுக்கு பிடிக்கும்.எந்த நடிகருடன் நடித்தால் உங்களுக்கு பிடிக்கும் என்றும் கேட்கப்பட்டது.


அதற்கு பதில் கூறிய அவர்கள், அம்மா நடிச்ச படங்களிலேயே காதல் கோட்டை ரொம்ப பிடிக்கும். அஜித் அம்மாவுக்கு பொருத்தமாகஇருப்பார் என்றும் தெரிவித்துள்ளனர். அத்தோடு சூரியவம்சம் திரைப்படமும் ரொம்ப பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement