• Dec 26 2024

இந்த இடத்துக்கு ரொம்ப ஈஸியாக வரல, கஷ்டப்பட்டு வந்துருக்கேன்- வெளிப்படையாகப் பேசிய மாயா

stella / 11 months ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியையும் கலக்கலாக தொகுத்து வழங்கி உள்ளார். இந்த சீசன் ஏகப்பட்ட விமர்சனங்களுடன் கடந்து வந்த நிலையில் ஒரு வழியாக கிராண்ட் ஃபினாலேவும் வெற்றிகரமாக  நேற்றைய தினம் நிறைவடைந்துள்ளது.

சீசன் டைட்டிலை மாயா தூக்கப் போகிறாரா? அல்லது அர்ச்சனா தூக்கப் போகிறாரா? என்கிற கேள்வி கடைசி வரை விஷ்ணு பேசியதற்கு பிறகும் பிக் பாஸ் ரசிகர்கள் மனங்களிலும் எழுந்தது. அந்தளவுக்கு இந்த சீசன் பல ட்விஸ்ட் மற்றும் டர்ன்களுடன் நகர்ந்து கொண்டே சென்றது. 


மாயாவுக்கு சேனல் சப்போர்ட் மற்றும் கமல்ஹாசன் சப்போர்ட் இருப்பதாக விமர்சனங்களும் குவிந்தன. ஆனால், அவர் ரன்னர் அப்பாக கூட ஆகாமல் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் இவருடைய விளையாட்டு முறை தவறாக இருந்ததாலும் ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மாயா அளித்த பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் மாயா, நான் சின்ன சின்ன கேடக்டர்களில் நடித்து தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.ரொம்ப ரொம்ப சின்ன கேரக்டர்களில் நடித்து கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறேன்.அதனால தான் பார்த்து பார்த்து கேரக்டர்களைத் தேர்வு செய்து நடித்து வருகின்றேன்.


இவ்வளவு துாரம் கஸ்ரப்பட்டு வந்தாச்சு, திரும்பவும் எதிலையும் சொதப்பிடக் கூடாது என்பதில் ரொம்பவும் உறுதியாக இருக்கிறேன் என்றும் மாயா பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement