• Apr 08 2025

அதர்வா பேமிலிகிட்ட டானியல் பாலாஜி பேசிக்க மாட்டாரு! உண்மையை உடைத்த தனுஷ் !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் என பல சினிமாக்களில் வில்லனாக நடித்தவரும் , நடிகர் முரளியின் தம்பியுமானவர் டானியல் பாலாஜி ஆவார். சன் டிவியில் ஒளிபரப்பாகிய "சித்தி" சீரியலில் டானியல் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர். தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையிலேயே சமீபத்தில் அவர் மரணமடைந்துள்ளார்.


எதிர்பாராத விதமாக கடந்த மார்ச் 29 ஆம் திகதி மாரடைப்பினால் உயிரிழந்தார். இவரது இறுதி சடங்குகள் இவர் இல்லத்தில் நடைபெற்ற நிலையில் இயக்குனர் வெற்றி மாறன் , இயக்குனர் கௌதம் வாசுமேனன் , இயக்குனர் அமீர் என பல இயக்குனர்கள் மற்றும் நடிகர் விஜய்சேதுபதியும் வருகை தந்து தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தி இருந்தனர். இந்த நிலையிலேயே நடிகர் முரளியின் மகனும் நடிகருமான அதர்வா குடும்பத்துடன் இறுதி அஞ்சலி செலுத்த வந்தது சர்ச்சையை ஏற்றப்படுத்தி உள்ளது.


டானியல் பாலாஜியின் தொழில் நண்பரும் அதர்வாவின் DNA திரைப்படத்தின் வில்லனுமான தனுஷ் அவர்கள் பிரபல யூடியூப் தளம் ஒன்றில் பேர்டி கொடுத்த போது பல சுவாரசியமான விடயங்களை பகிர்ந்திருந்தார். அவர் கூறுகையில் "டானியல் என்னிடம் கூறியுள்ளான் நாங்கள்  அதர்வா குடும்பத்துடன் பேசுவதில்லை ஆனா முரளி அண்ணாவுக்கு என்மேல் பாசம் கூட " இவ்வாறு டானியல் பாலாஜி தன்னிடம் கூறியதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.


Advertisement

Advertisement