• Dec 26 2024

ஐஸ்வர்யா பிரச்சனையை முடித்தவுடன் தான் ‘இளையராஜா’ படம்.. அதிரடி முடிவெடுத்த தனுஷ்?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யாவை கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து இருந்த நடிகர் தனுஷ் தற்போது சட்ட ரீதியான விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த பிரச்சனை முடிந்தவுடன் தான் ‘இளையராஜா’ படத்தில் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் திடீரென தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையை தனுஷ் கவனிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுளாக ஐஸ்வர்யாவை பிரிந்திருக்கும் தனுஷ்,  இருவரையும் சமாதானப்படுத்த பலர் முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் குடும்ப ரீதியிலான அத்தனை குழப்பங்களும் முடித்த பிறகு ‘இளையராஜா’ படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஐஸ்வர்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு பெற்ற பின்னர் தான் தன்னால் ‘இளையராஜா’ படத்தில் முழுமையாக கவனம் செலுத்த முடியும் என்று கூறியிருப்பதாக தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் ’ராயன்’ படத்தின் தொழில்நுட்ப பணிகள் ’குபேரன்’ படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொண்டிருக்கிறார் என்பதும், அதுமட்டுமின்றி ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் படப்பிடிப்பும் அவ்வப்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement