• Jan 04 2025

தனுஷுக்கு சொந்தத்தில் பொண்ணு ரெடி.. அண்ணாவை போல தம்பிக்கும் திருமணம் நிச்சயம்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்போது இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்திற்கு விண்ணப்பித்து உள்ளார்கள்.

தனுஷ் ஐஸ்வர்யா இடையே உள்ள பிரச்சனைகளை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மட்டுமின்றி நண்பர்களும் தீவிரமாக விடுபட்டார்கள். ஆனாலும் அவர்கள் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்துள்ளார்கள். இதைத்தொடர்ந்து இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் குடும்ப நல சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அத்துடன் தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்கள்.


இந்த நிலையில், கஸ்தூரி ராஜா உங்களுடைய குழந்தைகளுக்காவது சேர்ந்து வாழுங்கள் என தனுஷின் பேசி வந்த நிலையில், அவர் விவாகரத்து பெறுவதில் முடிவாக இருப்பதினால் மகனின் வாழ்க்கையை நினைத்து அவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளார்.


அதன்படி தனது சொந்தத்தில் பெண் பார்த்து வருவதாகவும் அதில் ஒரு பெண்ணை குடும்பத்தார்கள் பார்த்து முடிவு செய்து விட்டதாகவும் இணையத்தில் செய்தி பரவி வருகின்றன. தனுஷின் அண்ணனும் முதலில் சோனியா அகர்வால் திருமணம் செய்து அதன் பிறகு பிரிந்தார்கள். 

எனினும் இரண்டாவது ஆக சீதாஞ்சலி என்ற பெண்ணை திருமணம் செய்து தற்போது மூன்று பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றார். இதனால் அண்ணனை போல தம்பிக்கும் இரண்டாவது திருமணம் கட்டாயம் நடக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

Advertisement

Advertisement