• Dec 26 2024

மாரி கொடுத்த மாஸ் அப்டேட்! மீண்டும் இணையும் கர்ணன் டீம்! வரலாற்று திரைப்படத்தில் தனுஷ்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகராகவும்,இயக்குனராகவும் தற்போது பிசியாக இருக்கும் நடிகர் தனுஷ்" ராயன்" என்ற தன் ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடித்து மிகப்பெரிய வெற்றிகண்டார். கிட்டத்தட்ட நூறு கோடிக்கு மேல் இப்படம் வசூலித்து சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து இன்னும் ஒரு சில படங்கள் இயக்கி வருகிறார். 


மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் குபேரா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார் தனுஷ். இசைஞானி இளையராஜாவின் பயோபிக் இந்தாண்டு இறுதியில் துவங்கவுள்ளது. அருண் மாதீஸ்வரன் இயக்கும் இப்படத்தில் இளையராஜாவாக நடிக்க இருக்கின்றார் தனுஷ். 


இதைத்தொடர்ந்து தனுஷை வைத்து மேலும் இரு படங்களை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இவ்வாறு பிசியாக இருக்கும் தனுஷின் லைன்அப்பில் மாரி செல்வராஜும் இருக்கின்றார். தற்போது மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தை முடித்த பிறகு தனுஷுடன் இணையவுள்ளார் மாரி செல்வராஜ்.


ஏற்கனவே இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் இவர்களின் கூட்டணி இணைய இருக்கின்றது. இப்படத்தை தனுஷே தயாரிக்கவும் உள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆனபோதும் அதன் பிறகு இப்படத்தை பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருந்தது.


இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில், தனுஷை வைத்து வரலாற்று திரைப்படத்தை உருவாக்கவுள்ளேன். இப்படத்தை எடுத்து முடிக்க சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகலாம். அந்தளவிற்கு உழைப்பு இப்படத்திற்கு தேவைப்படுகின்றது என்று கூறினார். இதன் அப்டேட்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்.

Advertisement

Advertisement