• Dec 26 2024

அருண் மாதேஸ்வரனோட சேராதேன்னு சொன்னா கேட்டியா? தனுஷை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்து இயக்கிய ’ராயன்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில்  ஒரு சில நெகட்டிவ் விமர்சனங்களும் பதிவாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வன்முறையாக இருந்த நிலையில் அவருடன் சேர்ந்ததால் தான் ’ராயன்’ படத்தையும் தனுஷ் வன்முறை படமாக எடுத்து உள்ளார் என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்

தனுஷின் முதன் முதலில் இயக்கிய படமான ’பா பாண்டி’ ஒரு அழகான குடும்ப கதையம்சம் கொண்ட படமாக இருந்தது என்றும் ஆனால் அருண் மாதேஸ்வரன் வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களிடம் சேர்ந்த பிறகு தான் வன்முறை என்ற பாதையில் சென்று தனுஷ் கெட்டுப் போய் விட்டார் என்றும் பதிவு செய்யப்பட்டு வருகிறது

மேலும் வெட்டு, குத்து, கொலை, கொள்ளை இப்படியான கதையில் நடித்து வரும் தனுஷ் தயவு செய்து இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வேண்டாம் என்றும் உங்கள் பாதையை இதுதான் என்று முடிவு செய்து விட்டால் அதே பாதையில் சென்று கொள்ளுங்கள் இளையராஜா படத்தை கெடுத்துவிட வேண்டாம் என்றும் அதுவும் அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து இளையராஜா படத்தை எடுப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை என்றும் பலர் பதிவு செய்து வருகின்றனர்.

’ராயன்’  திரைப்படத்தின் முதல் பாதி நன்றாக இருந்தாலும் இரண்டாவது பாதியில் முழுக்க முழுக்க வன்முறை வெட்டு, குத்து படமாக இருந்தது என்றும் அதனால் தான் இந்த படத்துக்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் இனிமேலும் இந்த தவறை தனுஷ் செய்ய வேண்டாம் என்றும் பல ரசிகர்கள் அவரது கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement