• Dec 26 2024

அடடா இது நல்லா இருக்கே! குட்நைட் பட பிரபலத்திற்கு இப்படி ஒரு வாய்ப்பா? சூப்பர்ஹிட் கொடுக்க தயாராகும் தனுஷ்!

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் சமிபத்தில் கொடுத்து வரும் படங்கள் அவ்வளவாக வெற்றியை தரவில்லை. இருந்தாலும் அவர் நடிப்பதை விடவில்லை. தனது ரசிகர்களுக்காக அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். 


வித்தியாசமான கதைகளை தேர்ந்த்தெடுத்து நடித்து வருபவர் தான் தனுஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து இருந்தனர். தற்போது தனுஷின் 51வது படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா எனப் பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.


மணிகண்டன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான குட் நைட் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கம்மி பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து இருந்தனர். இந்நிலையில் தனுஷ் குட் நைட் படத்தை பார்த்துவிட்டு படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரனை போனில் அழைத்து பாராட்டி இருக்கிறார். அதுமட்டுமின்றி தனுஷ் அவருடன் சேர்ந்து பணியாற்ற விருப்பத்தையும் தெரிவித்து இருக்கிறாராம்.


இதற்கு அந்த இயக்குனர் தற்போது தான் கதை எழுதி வருகிறேன் என்றும் அந்த கதையில் நீங்கள் பொருந்தினால் உங்களுடன் இணைவேன் என்று கூறினாராம். சரி பொருந்து இருந்து  இந்த கூட்டணி அமைகிறதா? இல்லையா? பார்ப்போம்

Advertisement

Advertisement