• Dec 26 2024

தனுஷ் படத்திற்கு மியூசிக் போடுறது கஷ்டமென சொன்ன இசைப்புயல்! ஆனா நடந்தது என்ன?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தனுஷின் ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ராயன் படத்தில் நடிகர் தனுஷ் உடன் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், வரலஷ்மி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன் என பல நட்சத்திரங்களும் நடித்துள்ளார்கள். இந்த படம் எதிர்வரும் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆக தயாராக உள்ளது.


இந்த நிலையில், இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானிடம் தனுஷ் போனில் பேசியபோது, என்னுடைய ஐம்பதாவது படத்தில் உங்களுடைய பெயர் இடம் பெற வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் என சொல்ல, அவர் இரண்டு நாள் கழித்து சொல்வதாக சொன்னார்.

அதன்படி இரண்டு நாள் கழித்து ரகுமான் சாரிடமிருந்து போன் வந்தது. அதில்  நான் இப்போது 30 படங்களுக்கு இசையமைத்துக்கொண்டு உள்ளேன். ஆகையால் இந்த படத்திற்கு இசை அமைக்கின்றேன் என சொல்வது மிகக் கடினமான விடயம். ஆனாலும் நான் இசை அமைக்கின்றேன் என கூறினார். இவ்வாறு தனுஷ் இசைப்புயல் பற்றி பேசியுள்ளார்.


Advertisement

Advertisement