• Dec 25 2024

ட்ரென்டிங் டாக்! விக்கிக்கு வாய்ப்பு கொடுத்த தனுஷ்! அந்த படத்தில் நடிக்க மறுத்த பிரபலம்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தற்போது சோசியல் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விடயம் நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் தனுஷ் இடையே ஏற்பட்ட பிரச்சினை தான்.  நயன்தாராவின் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்த நானும் ரவுடி தான். திரைப்படத்தினை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார். தனது ஆவண விடீயோவிற்கு அந்த படத்தில் 3 செக்கெட் வீடியோ பயன்படுத்தியதற்கு நஷ்ட்டயீடு கேட்டதனாலே இந்த பிரச்சினை நீண்டுகொண்டு செல்கிறது.


தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் சின்ன ரோலில் நடித்தவர் விக்னேஷ் சிவன். நடிகர் தனுஷ் தனியாக அழைத்து அவரிடம் கதை கேட்டதாக கூறப்படுகிறது. அப்படி அவர் சொன்ன கதை தான் நானும் ரவுடிதான் படம். தனுஷ் தன்னுடைய நிறுவனம் மூலம் தயாரிப்பதாக ஒப்புக்கொண்டார். படத்திற்கு முதலில் ஆறு கோடி பட்ஜெட் போடப்பட்டிருந்தது. ஆனால் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையே இருந்த காதலால் படப்பிடிப்பில் பல கோளாறுகள் நடந்திருக்கிறது. 


இதனால் படம் குறிப்பிட்ட பட்ஜெட்டை விட 10 கோடி அதிகமாக சென்றதாக கூறப்படுகிறது. இது தனுஷ் தரப்பிற்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியதாம். படம் சூப்பர் ஹிட் என கூறப்பட்டால் கூட தனுஷிற்கு வியாபார ரீதியாக படம் நஷ்டம் என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ஆர்.ஜே பாலாஜி. இந்த கேரக்டர் அவருக்கு கோலிவுட்டில் நிறைய பட வாய்ப்புகள் பெற்றுக் கொடுத்தது உண்மைதான். ஆனால் இந்த கேரக்டர் முதலில் ஆர்.ஜே பாலாஜியிடம் வந்தபோது அவர் தன்னால் நடிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.


மிர்சி சிவா, கௌதம் கார்த்திக் மற்றும் சித்தார்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. பின்னர் விக்னேஷ் சிவன் கோரிக்கையை ஏற்று ஆர்.ஜே பாலாஜி அந்த கேரக்டரை நடித்திருக்கிறார். மேலும் விஜய் சேதுபதி அவருக்கு நெருங்கிய நண்பர் என்பதால் இதை ஒப்புக்கொண்டதாகவும் தன்னுடைய பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இப்படி தனக்கு வாய்ப்பு தந்தவருக்கு எதிராகவே இவாறு பிரச்சினை எழுவது தற்போது பேசுபொருளாகியுள்ளது. 


Advertisement

Advertisement