பிரபல நடிகர் தனுஷ் நடிகராக படங்களில் நடிப்பதுடன் மற்றும் இல்லாமல் பாடல் பாடுவது, திரைப்படங்கள் இயக்குவது என பன்முகம் கொண்டவராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" . இந்த திரைப்படம் தொடர்பான அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் தனது இயக்கத்தில் பா.பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இட்லி கடை திரைப்படத்தில் தானே நடித்து இயக்கியும் வருகிறார். இந்நிலையில் இவர் இயக்கிய NEEK திரைப்படம் ஷூட்டிங் வேலைகள் எல்லாம் முடிந்த நிலையில் தற்போது ப்ரோமோஷன் வேலைகள் நடந்து வருகிறது.
இப்படத்தில் அனிகா சுரேந்தர், ப்ரியா பிரகாஷ், பவிஷு ஆகிய இளம் நடிகர்கள் நடிக்கிறார்கள். சமீபத்தில் வெளியான "கோல்ட் என் ஸ்பேரோ.." பாடல் குறுகிய நாட்களில் 50மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இது ஒரு காதல் கதையாக உருவாகி வரும் நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில் 2025 பெப்ரவரி மாதம் 7ம் திகதி ரிலீஸாக இருந்த நிலையில் தற்போது பெப்ரவரி 6 அஜித்தின் விடாமுயற்சி ரிலீசாகிறது. இதன் காரணமாக வசூலில் அடிவாங்கும் என படக்குழு NEEK திரைப்படத்தினை ஜனவரி 30ம் திகதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது அதிகார பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Listen News!