• Jun 10 2026

ஆலியா பட்டின் ‘ஆல்பா’ டீசர் எதிர்பார்ப்பை எகிற வைத்ததா.?

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட், இதுவரை இல்லாத அதிரடி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ஆல்பா. இயக்குநர் ஷிவ் ராவில் இயக்கியுள்ள இந்தப் படத்தை, பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கியுள்ளது.

இதுவரை உளவு, அதிரடி மற்றும் ஆக்‌ஷன் திரைப்படங்களை பெரும்பாலும் ஆண் கதாநாயகர்களை மையமாகக் கொண்டு உருவாக்கி வந்த யாஷ் ராஜ் நிறுவனம், முதல் முறையாக ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தனது யுனிவர்ஸை விரிவுபடுத்தியுள்ளது. அதனால் இந்தப் படத்தின் மீது ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த திரைப்படத்தில் ஆலியா பட்டுடன் இணைந்து பாபி தியோல், அனில் கபூர் மற்றும் ஷர்வரி வாக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிரடி காட்சிகள், உளவு பின்னணி மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு ஆகியவை இந்தப் படத்தின் முக்கிய அம்சங்களாக கூறப்படுகின்றன.

முதலில் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வருகிற ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இந்த நிலையில், ஆல்பா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் ஆலியா பட்டின் அதிரடி தோற்றம், சண்டைக் காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, யாஷ் ராஜ் யுனிவர்ஸில் ஒரு பெண் கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் முதல் திரைப்படம் என்பதால், இந்த முயற்சி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பும், அதே நேரத்தில் பெரும் சவாலாகவும் பார்க்கப்படுகிறது.

டீசர் வெளியானதைத் தொடர்ந்து, ‘ஆல்பா’ திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் டிரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement