• May 23 2026

100 கோடி பட்ஜெட்டுக்கு 23 கோடி தான் ரிட்டர்னா.? 'கர' படத்தின் மொத்த வசூல் விபரம் இதோ

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘கர’ திரைப்படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மமிதா பைஜூ, கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம், குடும்ப உணர்வை மையமாகக் கொண்டதாக உருவாகியுள்ளது.

‘இட்லிக்கடை’ படத்திற்கு பிறகு வந்த இந்த படத்திலும் அப்பா-மகன் உறவு முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது. இதனால் சிலர் படத்தை பாராட்டினாலும், மற்றவர்கள் இது ‘இட்லிக்கடை 2’ மாதிரி தான் என விமர்சித்து வருகின்றனர்.

இந்த படத்தின் வசூல் விவரங்களைப் பார்க்கும்போது, முதல் நாளில் ரூ. 6.20 கோடி வசூலித்த படம், இரண்டாம் நாளில் ரூ. 6.95 கோடியாக உயர்ந்தது. ஆனால் அதன் பிறகு வசூல் சரிவை சந்தித்தது. சனிக்கிழமை ரூ. 5.20 கோடி, ஞாயிற்றுக்கிழமை ரூ. 5 கோடி மட்டுமே வசூலித்தது.


இந்த நிலையில், 'கர ' படம் வெளியான  4 நாட்களில் மொத்தமாக ரூ. 23 கோடி வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.. சுமார் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படத்தில், தனுஷுக்கு மட்டும் ரூ. 58 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, ‘கர’ படம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் படியாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement